வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த கியூஆர் அடிப்படையிலான அடையாள முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

1. அங்கீகரிக்கப்படாத நபர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக நீக்கும் பொருட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் ECINET தளத்தில் கியூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2. 2026 மே 04 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையிலிருந்து தொடங்கி, இந்த முறையானது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான எதிர்கால அனைத்து பொது மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

3. இந்த முக்கியமான முன்னெடுப்பானது, கடந்த ஓராண்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகும்.

4. வாக்கு எண்ணும் மையங்களில் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக மும்முனைப் பாதுகாப்பு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் முனைகளில், வாக்கு எண்ணும் அலுவலரால் (RO) வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணும் கூடத்திற்கு அருகிலுள்ள மூன்றாவது மற்றும் உட்புறப் பாதுகாப்பு வளையத்தில், கியூஆர் குறியீட்டை (QR code) ஸ்கேன் செய்து வெற்றிகரமாகச் சரிபார்த்த பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்கப்படும்.

5. புதிய கியூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அரங்குகளில் நுழைய இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் அதிகாரிகள், உதவித் தேர்தல் அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்குப் பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version