மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைகோவை பாராட்டிப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது…
“முதலில் வைகோவுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஆற்றிய உரைகளுக்காகவோ அல்லது இந்த நூலுக்காகவோ மட்டும் அல்ல; தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்துள்ள கொள்கை உறுதிக்காகவும் அவரை வாழ்த்துகிறேன்.”
“ஒரு அரசியல்வாதியை மதிப்பிடும்போது நான் முதலில் பார்ப்பது அவரின் கொள்கை நிலைத்தன்மையைத்தான். அவர் நம்பும் கருத்துகளில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா, அல்லது ஒரு நாள் ஒரு கருத்து, மறுநாள் வேறு கருத்து என்று மாறுகிறாரா என்பதையே கவனிப்பேன். அந்த வகையில், நமது நாட்டின் மிகவும் கொள்கை உறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வைகோ திகழ்கிறார்”
“வைகோவுக்கு தற்போது 82 வயதாகிறது. ஆனால் அவர் இன்னும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கும் மாணவராக இருக்கிறார். தொடர்ந்து அடிப்படையான கேள்விகளை எழுப்பி வருகிறார். சிலரைப் போல அல்லாமல், அவர் சிந்தித்து கேள்வி கேட்கும் பண்பை இன்றும் தக்க வைத்திருக்கிறார்”
இவ்வாறு ராகுல்காந்தி பாராட்டி பேசினார்.
