மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகம் வருகை தர உள்ள ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதியை நிலைநாட்டுவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது ஆகிய இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியைத் தமிழக காங்கிரஸ் குடும்பமும் மக்களும் உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நமது பயணம் மேலும் வலுப்பெறட்டும் என்றும் தனது பதிவில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version