தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.

பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 7 மற்றும் 8ம் தேதி தவிர்த்து மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜுன் 9ம் தேதி இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். 10ம் தேதி, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ம் தேதி இறுதி நாளாகும்.

விரைவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், எனவே அறிவிக்கப்பட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version