தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் ஜூன் 18, 2026 அன்று காலியாகும் 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இவற்றுடன் சேர்த்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள தலா ஒரு இடத்திற்கான இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறவிருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை  (ஜூன் 1)  முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும், ஜூன் 11ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மற்றும்  வாக்கு எண்ணிக்கை ஜூன் 18ஆம் தேதி நடைபெற்று மாலை 5 மணிக்கு மேல் முடிவுகள் வெளியாகும்.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடக் கூடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version