Close Menu
    What's Hot

    சூடுபிடிக்கும் குதிரை பேர வழக்கு..!! சிக்கிய மேலும் 2 பேர்..!! கட்டு கட்டாக பணம் பறிமுதல்..!!

    3 மணி நேர தேர்வு.. வாழ்நாள் கனவுகளுக்கு தீர்ப்பாக இருக்க முடியாது – மாணிக்கம் தாகூர்..!!

    ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போலீஸ் வலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்? தவெக ஆட்சி கவிழ்ப்பு சதியில் புதிய பரபரப்பு..!!
    Featured

    போலீஸ் வலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்? தவெக ஆட்சி கவிழ்ப்பு சதியில் புதிய பரபரப்பு..!!

    editor5By editor5July 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 15 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட பரபரப்பு வழக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமண பெருமாள் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தற்போது போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜா, த.வெ.க. அரசை கவிழ்க்க சதி நடைபெறுவதாக திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூர் தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய ஐந்து பேரும் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர்.

    இந்த ஐந்து பேரும் போலீசாரின் இரண்டு நாள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். விசாரணையில், கைதானவர்களுடன் சிங்கப்பூர் தொழில் அதிபர் லட்சுமண பெருமாள் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதும், சட்டவிரோத ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.

    சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் லட்சுமண பெருமாள், சென்னையில் உள்ள பல அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் ஆலோசனையின் பேரில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் அவர் சென்னையைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக போலீசார் கூறுகின்றனர். மேலும், இவர் சென்னையில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிக்க லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே முயற்சி மேற்கொண்டதாக, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், லட்சுமண பெருமாளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தினசரி காலையிலும் மாலையிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருவரும் விரைவில் போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Horse Trading TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!!
    Next Article ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??
    editor5

    Related Posts

    சூடுபிடிக்கும் குதிரை பேர வழக்கு..!! சிக்கிய மேலும் 2 பேர்..!! கட்டு கட்டாக பணம் பறிமுதல்..!!

    July 10, 2026

    3 மணி நேர தேர்வு.. வாழ்நாள் கனவுகளுக்கு தீர்ப்பாக இருக்க முடியாது – மாணிக்கம் தாகூர்..!!

    July 10, 2026

    ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூடுபிடிக்கும் குதிரை பேர வழக்கு..!! சிக்கிய மேலும் 2 பேர்..!! கட்டு கட்டாக பணம் பறிமுதல்..!!

    3 மணி நேர தேர்வு.. வாழ்நாள் கனவுகளுக்கு தீர்ப்பாக இருக்க முடியாது – மாணிக்கம் தாகூர்..!!

    ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??

    போலீஸ் வலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்? தவெக ஆட்சி கவிழ்ப்பு சதியில் புதிய பரபரப்பு..!!

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.