திரை இசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தசாப்தங்களாக கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த  பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தனது 88-வது வயதில், வயது மூப்பின் காரணமாக மைசூரில் உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஏப்ரல்23,1938ஆம் ஆண்டு பிறந்த எஸ்.ஜானகி, இளம் வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசைப்பயணத்துக்காக சென்னைக்கு குடிபெயர்ந்தவர், 1957-ஆம் ஆண்டு வெளியான ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். தமிழில் அதே ஆண்டு ‘விதி அமையாதவன்’ என்ற படத்தின் பாடல்கள் பாடினார்.

தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், சிங்களத்திலும் கூட பாடல் பாடியுள்ள எஸ்.ஜானகி 48ஆயிரம் பாடல்கலைப் பாடியுள்ளார்.

தான் பாடும் கேரக்டரை உள்வாங்கி பாடுவதோடு, சிறு குழந்தை போல் பாடும் ஆற்றலும் கொண்டவர் பாடகி எஸ்.ஜானகி.

இதுவரை 4 முறை தேசிய விருதுகளும், பல்வேறு மாநிலங்களின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கால தாமதாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி அந்த விருதினை ஏற்க மறுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.ஜானகி.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். அத்துடன் இளையராஜா, எஸ்.பி.பி. மனோ உள்பட பலருடனும் பாடல்கலைப் பாடியிருக்கிறார்.

தனது பாடல்களின் வழியே பல்வேறு உணர்ச்சிகளைக் கடத்தி, ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த எஸ்.ஜானகி வயது மூப்பின் காரணமாக ஜூன் 11ஆம் தேதி மைசூரில் உயிரிழந்தார்.

அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்தனர்.

ஜூன் 12ஆம் தேதி எஸ்.ஜானகி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. திரைத்துறையினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள், ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாலையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டன. இதையடுத்து பாடகி எஸ்.ஜானகியின் உடல் சந்தனக் கட்டைகளில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தனது காந்தக் குரல்களால் எல்லோரையும் வசீகரித்த எஸ்.ஜானகியின் உடலை அக்னி அரவணைத்தது. ஆனால் அவரது குரல் என்றென்றும்  காற்றில் கலந்திருக்கும் கானங்களாக!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version