தன்னை கொலை செய்வதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளதாக யூடியூபர் சவுகு சங்கர் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

  லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக உள்ள அருண், என்னைக் கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளார்.

எனக்கு டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக நான் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 2025-ஆம் ஆண்டும், தன்னைக் கொலை செய்வதற்காக தென்தமிழகத்தில் இருந்து ஒரு கூலிப்படையை அருண், 

செல்வநாதரத்தினம் ஐபிஎஸ் மற்றும் வருண்குமார் ஆகியோர் மூலம் பணம் கொடுத்து நியமித்திருந்ததாகவும் அப்போதும் டெல்லியில் இருந்து வந்த தகவலையடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை சந்தித்து புகார் அளித்துவிட்டு  பத்திரிகையாளர்களை சந்தித்ததாகவும்,  அந்த சந்திப்புக்குப் பிறகே கொலைத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவலைக் கூறினார்.

இந்தியாவில் யாருக்கும் நடக்காத கொடுமைகள் எல்லாம் தனக்கு நடந்துள்ளது எனவும், வீட்டின் படுக்கையறை, சமையலறை ஆகிய இடங்களில் மலம் மற்றும் சாக்கடை கழிவுகள் கொட்டப்பட்டதயும் குறிப்பிட்டார்.

தற்போது சட்டம்-ஒழுங்கு பிரிவில் அருண் இருந்திருந்தால், தன் மீது 15 வழக்குகள் பதிவு  செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் எனவும், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பதால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக கூலிப்படையை நியமித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழக முதல்வரிடம் இது தொடர்பாக வலியுறுத்துவதாகக் கூறிய சவுக்கு சங்கர், அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர்.  இதை நான் மட்டும் சொல்லவில்லை; சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் கூறப்பட்டுள்ளது என்றார்.

பொதுமக்கள் மத்தியில், உங்கள் வாயிலாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை காவல்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஐயப்பன், லஞ்ச ஒழிப்புத் துறையில் அருணுடன் பணியாற்றி வருகிறார்.

சென்னை காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சந்திரசேகர், அயல் பணியாக லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். ஐயப்பனும் சந்திரசேகரும் இணைந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் மாமூல் வசூலித்து வருகிறார்கள்.

 இது காவல் ஆணையருக்கும், உளவுத்துறைக்கும், முதல்வருக்கும் தெரியுமா என்பது தெரியவில்லை என புதிய தகவலை வெளியிட்டார்.

 அரசு அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும எனவும்,

 கடந்த ஆட்சியில் மின்வாரியத் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன் மீண்டும் அதே பொறுப்பில் உள்ளார். அவரை மாற்றாமல் எப்படி ஊழலை கண்டுபிடிப்பது எனக் கேள்வி எழுப்பினார்.

திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகள், ஊழலுக்கு துணைபோனவர்கள் எனக் கூறப்படுபவர்களையே தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கிறார்கள். இதைத்தான் இந்த முதல்வர் விரும்புகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் நேரு மீது ஒரு புகார் இருந்தது. அந்த புகார் தொடர்பான ஆவணங்களை முழுமையாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது அருண் தான் என குற்றம் சாட்டுகிறேன்.

பல துறைகளுக்கு நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளீர்கள். ஆனால் முக்கியமான லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இப்படிப்பட்ட அதிகாரியை நியமிக்கலாமா?

ஊரே இதைப்பற்றி பேசுகிறது, இதை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், எந்த விமர்சனமும் வந்தாலும் கவலைப்படாமல் ஆட்சி நடத்துகிறோம் என்ற எண்ணத்தில் முதல்வர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

திமுகவின் தலைவர்களையே சில அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். நீங்கள் புதியவர்கள் நிர்வாக அனுபவம் இல்லாமல் வந்திருக்கிறீர்கள். அந்தத் தவறை செய்து விடாதீர்கள் என்பதைத்தான் நான் கூறுகிறேன்” என்று யூடியூப்பர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version