வயிற்று வலிக்காரருக்கு கட்டிலை திருப்பி போட்டு படுத்தால் வயிற்று வலி சரியாகாது. எடப்பாடி பழனிசாமி வயிற்று வலிக்காரராக உள்ளார் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாற்றில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்கின்ற ஒரு தலைவர் முதலமைச்சர் விஜய் தான்.

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை தெரிந்ததற்கு பிறகு எல்லோரும் இன்று இணைந்து இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியான ஒன்று.

தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரைக்கும் குதிரை பேரம் எங்கும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியது  யாரென்று நாடு தெரிந்திருக்கிறது.
திமுக ஆதரவோடு நான் முதலமைச்சர் ஆவேன் என்று தெரிவித்தது யார். அவரிடத்தில் பதில் கேட்டால் அது சரியாக இருக்கும்.

நானே ராஜினாமா செய்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். ஒரே மாதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது அவரவரின் விருப்பம்.

புதிய ஆட்சி வந்திருக்கிறது. 6 மாதங்களுக்கு நாங்கள் எந்த கருத்தும் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சி தெரிவித்தனர்.  நாங்களும் பொறுத்திருந்து தான் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் தர வேண்டும்.

குற்றங்கள் நடைபெறுகின்ற போது உடனுக்குடன் அதிரடியான நடவடிக்கைகளும் முதலமைச்சராக எடுத்திருக்கிறார். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

“டார்கெட் அதிமுக” என்ற அடிப்படையில் அதிமுகவில் உள்ளவர்களை தமிழக வெற்றி கழகத்தில் சேர்ப்பதாக விமர்சனம் உள்ளது தொடர்பான கேள்விக்கு, வயித்து வலிக்காரருக்கு கட்டிலை திருப்பி போட்டு படுத்தால் வயிற்று வலி சரியாகாது, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி வயிற்று வலிக்காரராக உள்ளார்.

கட்சியில் சேர்ந்து இருப்பவர்கள் என்னை சந்தித்தார்கள். நான் அவர்களை சந்தித்தேன். நான் யாரையாவது சேர்த்து இருக்கிறேனா?

எடப்பாடி பழனிச்சாமி என் மீது வேகத்தில் இருக்கிறார்.நான் வெளியில் வந்த பிறகு அவர் சரிந்திருக்கிறார். அதுதான் அவருக்கு வேதனை.

அதிமுகவில் ஜனநாயகம் இல்லை, எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை பெரிதாக வைத்தால் தான் சிரிக்கிறார். அம்மாவும் ,தலைவர் படமும் இல்லாமல் அவருக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பாராட்டு விழா நடத்தும்போது அம்மாவின் புகைப்படமும் எம்ஜிஆரின் படமும் இல்லாமல் என்னை பாராட்டினால் போதும் என நினைத்தார் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version