குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டனர்.

நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி, வழக்கு விசாரணை முடியும் வரை இருவரும் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் கையெழுத்திட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version