சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இளைஞர் காவல் நிலைய மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆறு காவலர்கள் கடுமையாக தாக்கியதில் அஜித் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

இளைஞர் அஜித் மரண விவகாரத்தில் உண்மைகள் மூடி மறைக்கப்படுவதாகவும், அவரது உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தப்பட்டதாகவும் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த உடன் அமைச்சர் பெரிய கருப்பன் அஜித்-தின் குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும், அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் என யாரும் அஜித்-தின் குடும்பத்தினரை நெருங்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version