தமிழகத்தில் வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும், அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்திலும் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், வளிமண்டல மாற்றங்கள் காரணமாகவும் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்று கணித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version