கர்நாடகாவில் சிப்பி எடுப்பதற்காக ஆற்றுக்குள் சென்றவர்களில் 10 பேர் பரிதாபமாக மூழ்கி உயிரிந்துள்ளனர்.
உத்தரகன்னடா மாவட்டத்த்ல் பத்கல் பகுதியருகே உள்ள வெங்கடபுரா ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்பி மட்டும் சங்கு எடுப்பது வழக்கம். அவற்றை உணவுக்காகம் விற்பனை செய்தும் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று, வெங்கடாபுரம் ஆற்றில் 14 பேர் சிப்பி எடுக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மும்முரமாக சிப்பிகளையும் சங்குகளையும் ஆற்றுக்குள் மூழ்கி சேகரித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் சேகரித்த சிப்பிகளையும், சங்குகளையும் எடுத்தபடி அவசர அவசரமாக ஆற்றில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர்.
ஆனால், அதற்குள் நீரோட்டம் அதிகமாகி நீர் மட்டம் உயர்ந்ததால், ஆற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடியுள்ளனர். இதனால், கரையை அடைவதற்கு முன்னதாக அவர்கள் ஆற்று நீரில் இழத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, காப்பாற்றவும் முயன்றுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த பத்கல் நகர போலீசார், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 4 பேரை மட்டுமே மீட்க முடிந்த நிலையில் அவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
10 பேர் ஆற்றுக்குள் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்லது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஷிராலி நகரில் உள்ள சாரதாஹோல் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
