கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. உலகம் முழுவதும் இவரது ஆட்டத்திற்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகிறார் மெஸ்ஸி.

அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா (FIFA) சமூக வலைதளங்களில் மெஸ்சியை பாராட்டும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகர்களிடையே பிரபலமான “தல” என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தோனி மற்றும் மெஸ்சி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அப்படி தோனிக்கு, மெஸ்ஸிக்குமான ஒற்றுமைகள் என்னென்ன என்று பார்ப்போமா?

* அமைதியான அணுகுமுறை : இருவருமே மைதானங்களில் பேச்சால் இல்லாமல், தங்களது ஆட்டத்தின் மூலம் மட்டுமே பதிலளிப்பர்.

* வெற்றிப் பாதை : தனது வெற்றி மட்டுமின்றி அணியின் வெற்றியை முதன்மையானதாக கருதுவர்.

லியோனல் மெஸ்ஸியை பொறுத்தவரை 2006-ம் ஆண்டு முதல் முரையகா உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். அதனை தொடர்ந்து 2010, 2014, 2018 ஆகிய தொடர்களிலும் விளையாடினார். ஆனால் எந்த தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இறுதியில் 5வது முயற்சியாக 2022ம் ஆண்டு உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அணியை சாம்பியனாக்கி அழகு பார்த்தார் மெஸ்ஸி.

கடந்த 2024-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ புகைப்படத்தை பகிர்ந்த ஃபிஃபா Thala for a Reason என்ற வாசகத்தை பதிவிட்டிருந்தது. தற்போது மெஸ்ஸிக்கும் தல பட்டம் வழங்கி இருப்பது ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version