காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான பொருளாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் நிர்மல்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, மாநிலத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.பெண் ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை மகளிர் நீதிமன்றங்களில் விரைந்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத் தர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் தொய்வில்லாமல் இருக்க, தனியாக ஒரு புதிய வழிகாட்டு நெறிமுறை (SOP) வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் அரசியல் பேச்சுக்கள் இரு மாநில உறவைக் கெடுக்கும் வகையில் உள்ளதாகச் சாடிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட தமிழக முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று மிக உறுதியாகத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version