புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எஸ். ஜானகி அம்மாவின் மறைவு இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பல மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. எந்தவொரு உணர்ச்சியையும் தனது தனித்துவமான குரல் வளம் மற்றும் பன்முகத்தன்மையால் அவர் வெளிப்படுத்திய விதம் வியப்பிற்குரியது.

அவரது மெல்லிசைகள் வரும் காலங்களிலும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசைத் துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என்று பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version