தென்மேற்கு பருவமழையானது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், ஸ்ரீவிஜயபுரம் உள்ளிட்ட அந்தமான் தீவுகள்ன் சில பகுதிகளிலும் தொடங்கியது.
தொடர்ந்து ”வரும் 26-ம் தேதி கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் இன்று, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து நாளை தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், கோவை, நீலகிரி, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வருகிற 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
