2026 பிஃபா உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு எதிரான போட்டியில், காங்கோ ஜனநாயகக் குடியரசு அணியின் ஸ்டிரைக்கர் யோனே விசா (Yoane Wissa) அடித்த கோல், கால்பந்து வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. அந்த நட்சத்திர ஸ்ட்ரைக்கரின் கோல், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 52 ஆண்டுகால உலகக்கோப்பை கோல் தாகத்தைத் தீர்த்த அந்த வீரரின் பின்னணியில் ஒரு வலிமிகுந்த ஆசிட் தாக்குதல் போராட்டம் மறைந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு, பிரான்ஸ் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த விசா, இங்கிலாந்தின் பிரெண்ட்ஃபோர்டு அணிக்கு மாறவிருந்த தருணத்தில் ஒரு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். ரசிகர் போல நடித்து வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், விசா மீது ஆசிட் வீசினார். அவரது மகளைக் கடத்த முயற்சி செய்த அந்தப் பெண், இந்தத் தாக்குதலில் விசாவுக்குக் கடுமையான கண் பாதிப்புகளை ஏற்படுத்தினார்.

https://x.com/SulTanMahm34713/status/2067338405403574309?

இந்தத் தாக்குதலுக்குப் பின் கண் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்ட நிலையிலும், மனதளவில் உடைந்துபோகாமல் விசா மீண்டு வந்தார். “கால்பந்து வீரராக இருப்பதை விட, தந்தையாக என் குழந்தைகளைக் காப்பாற்றியதே முக்கியம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய விசா, ஆசிட் தழும்புகளைத் தனது அடையாளமாக ஏற்றுக்கொண்டார்.

தன்னம்பிக்கையுடன் மீண்டும் களமிறங்கிய அவர், பிரெண்ட்ஃபோர்டு அணியில் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்தார். தொடர்ந்து நியூகாஸில் யுனைடெட் அணிக்கு £55 மில்லியனுக்கு மாறினார். கடுமையான காயம் மற்றும் மன உளைச்சல்களைத் தாண்டி, தற்போது 2026 உலகக்கோப்பையில் போர்ச்சுகலுக்கு எதிராக கோல் அடித்து தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். பார்வை பறிபோகும் நிலையைத் தாண்டி, இன்று உலக அரங்கில் சாதனை படைத்த விசாவின் இந்த திறமை, விளையாட்டு உலகில் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் எத்தகைய கடினமான சூழ்நிலையையும் வெல்ல முடியும் என்பதற்கு யோனே விசா ஒரு சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளார். 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version