மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவதாகக் கூறியுள்ளார்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர்,

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,  விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!

ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்று ரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version