Close Menu
    What's Hot

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அமைச்சரிடமே அடாவடி வசூல்..!! அர்ச்சகர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!
    Featured

    அமைச்சரிடமே அடாவடி வசூல்..!! அர்ச்சகர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    editor5By editor5May 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்தூரில் அமைச்சரிடமே பணம் பெற்ற அர்ச்சகர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தாமே நேரில் சாதாரண உடையில் ஆய்வுக்கு வந்தபோது, அவரிடமே விஐபி தரிசனத்திற்காக ரூ.4,000 பணம் கோரி வசூலித்த அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.

    திருச்செந்தூர் முருகன் கோயில், ஏழு கடற்கரைத் தலங்களில் ஒன்றாகவும், முருகனின் ஆறு படை வீடுகளில் முக்கியமானதாகவும் பக்தர்கள் மத்தியில் உயர்ந்த நிலையில் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெகு தொலைவிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். எனினும், கோயிலில் கட்டண வசூல், விஐபி தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் பற்றிய புகார்கள் நீண்டகாலமாக எழுந்து வந்தன. தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.

    இந்நிலையில், கோயிலில் நிலவும் முறைகேடுகளை நேரில் அறிய அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், டி-ஷர்ட் அணிந்து முகக்கவசம் அணிந்தபடி சாதாரண பக்தரைப் போல் கோயிலுக்கு வந்தார். சண்முக விலாச மண்டபம் வாயிலில் அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அமைச்சர் என்று அறியாமல், விரைவான விஐபி தரிசனத்திற்கு ரூ.4,000 பணம் கோரினர். நான்கு பேர் கொண்ட குழுவுக்கு தலா ரூ.1,000 என்று கூறி, ஜி-பே மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டனர். பணம் செலுத்தப்பட்ட பிறகு அமைச்சர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி விசாரணை நடத்தினார்.

    உடனடியாக அந்த அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், கோயிலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. பண வசூலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற்காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் பணம் கேட்ட இரண்டு பணியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு ஈடுபட்டவர்கள் அமைச்சரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கோயில் நிர்வாகத்தில் நிலவும் வருவாய் இழப்பு, முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க மாநிலம் முழுவதும் உள்ள 38,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் தொடர் ஆய்வுகள் நடத்த உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் தரிசனத்தில் அனைவரும் சம உரிமை பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் உதிர்ந்த ரோமங்கள் – தவெகவில் அதிகாரப் போட்டி – அக்ரிகிருஷ்ணமூர்த்தி அதிரடி
    Next Article இருமொழிக் கொள்கை: தமிழ்நாட்டு பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன்!!
    editor5

    Related Posts

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    May 30, 2026

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    May 30, 2026

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!

    தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை.. நீங்க ஏன் பதறுறீங்க..?? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.