மிழ்நாட்டில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 13,999 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.

2026–27 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஆனால், நீட் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வுகள் முகமை இதுவரை வெளியிடாததால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 10 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை மாணவர்கள் www.tnmedicalselection.org இணையதளத்தின் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த கூடுதல் அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version