கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இந்திய ஆயுதப் படைகளின் வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தனது இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது.

இதனையொட்டி, தமிழக ஆளுநர் மாளிகை  தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஆளுநரின் செய்தியைப் பகிர்ந்துள்ளது. அதில், “கார்கில் போரில் நமது நாட்டின் வெற்றியை உறுதிசெய்த இந்திய ஆயுதப் படைகளின் மாவீரர்களின் நிகரற்ற தைரியம், தளராத உறுதி மற்றும் உச்சக்கட்ட தியாகத்திற்கு இந்த புனிதமான நாளில் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

நமது வீரர்களின் வீரம் வரும் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அமையும். நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் நமது தியாக மனப்பான்மை கொண்ட வீரர்களின் சேவையாலேயே பாதுகாக்கப்படுகிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. நமது ஆயுதப் படைகளுக்கு நமது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் தேசிய சேவையின் லட்சியங்களை உயர்த்திப் பிடிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். ஜெய் ஹிந்த்!” என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version