சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சியின் போது தபால் வாக்குகள் மற்றும் வாக்குபதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும், வாக்கு எண்ணும் போது பராமிக்ககூடிய படிவங்கள் 18, 20, 21 E, 21 C மற்றும் E, 22 உள்ளிட்ட 15 ஆவணங்கள் குறித்தான பயிற்சியும், வாக்குச்சவாடி முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 17C படிவத்தை வழங்குவது குறித்தும்,  வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டு வர கூடாது எனவும் வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் தேர்தல் ஆணையத்தின் விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் இருக்கும். Micro Observer (நுண் பார்வையாளர்), Counting supervisor (வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர்), counting assistant (வாக்கு எண்ணும் உதவியாளர்), Counting office assistant (வாக்கு எண்ணும் அலுவலக உதவியாளர்) ஆகியோர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. நேற்றைய தினம் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் நடந்தும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்கிய நிலையில் இன்றயை தினம் சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி பயிற்சி வழங்கியது.

சென்னையில் மூன்று இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது. குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version