தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மேடையில் விஜய்யை சந்தித்ததும் இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

விஜய் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ராகுல்காந்திக்கு வணக்கம் வைத்தார். இதன்பின்னர் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தவெகவினர், பதவியேற்குப் பின்னர் விஜய்யை சந்தித்து தங்கள் கைகளைப் பற்றி நன்றியைப் பகிர்ந்து கொண்டனர். விஜய் அருகிலேயே நின்று கொண்டு இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, ராகுல்காந்திக்கு பெயரளவுக்கு கூட எவரும் கைகுலுக்கவில்லை. செங்கோட்டையன் பதவியேற்றபோது விஜய் எழுந்து நின்றார். இதனால் உடனிருந்த ராகுல் காந்தி உள்ளிட்டோரும் உடன் எழுந்து நின்றனர். பதவியேற்புக்குப் பின்னர், விஜய்யைத் தழுவிய சீனியரான செங்கோட்டையனும் கூட ராகுலைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர் பேசிய விஜய், நிறைவில் நன்றி தெரிவிக்கும்போது ராகுல்காந்தி பெயரை உச்சரித்தார். அதனை அருகில் இருந்த புஸ்சி ஆனந்த், ராகுல்காந்திக்கு தெரிவித்தபோது லேசாக ராகுல்காந்தி முகம் மலர்ந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version