ஜப்பானின் தெற்குத் தீவுப் பகுதிகளை ‘டால்பின்’ (Dolphin) என்ற சூறாவளி மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறது. மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடிக்கும் இந்த காற்றால் ஒகினாவா மாகாணம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலின் தீவிரம் காரணமாக ஒகினாவாவின் முக்கியப் போக்குவரத்து மையமான நாஹா விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளிக் காற்றில் சிக்கி 70 வயது மதிக்கத்தக்க மூன்று முதியவர்கள் காயமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக, அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசித்த 240 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மிகக் கனமழையும், தீவிரமான காற்றும் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஜப்பான் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தென் ஜப்பானைக் கடக்கும் இந்த ‘டால்பின்’ சூறாவளி, நாளை மறுதினம் காலையில் சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version