Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வளம் தரும் வைகாசி மாதம்.. ரிஷப சூரியனால் 6 ராசிக்காரர்களுக்கு தேடி வரும் ராஜயோகம்!
    Featured

    வளம் தரும் வைகாசி மாதம்.. ரிஷப சூரியனால் 6 ராசிக்காரர்களுக்கு தேடி வரும் ராஜயோகம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2025Updated:May 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    screenshot7123 1683789812
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். மேஷ ராசியில் இதுநாள் வரை உச்சம் பெற்று பயணம் செய்த சூரியன் மே 15ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

    vaikasi month rasipalan 2025 1747233709496

    மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும், அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.

    ரிஷபம்: சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் அதிகாரப் பதவி கிடைக்கும், அப்பாவினால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும்.

    மிதுனம்: சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிவகைகளை செலுத்திவிடுவது நல்லது. பெண்களால் நன்மை உண்டாகும் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களினால் நன்மை உண்டாகும்.
    உடல் நலனில் கவனம் தேவை, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

    கடகம்: சூரியன் லாப ஸ்தானமான பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வேலை, தொழில் விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும்.

    சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்வதால் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வாகனங்கள் வாங்குவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.

    கன்னி: சூரியன் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்து வரும் தொழிலில் மேன்மை நிலை அடையும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினத்தவர்களால் சங்கடம் ஏற்படும் கவனம் தேவை. பழைய வீட்டை வாங்கி புதுப்பித்து குடியேறுவீர்கள்.

    துலாம்: சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார். வேலையிலும் வேலை செய்யும் இடத்திலும் கவனம் தேவை. வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணம், நகைகளை பத்திரப்படுத்தவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கனவு நனவாகும் காலம் வந்து விட்டது.

    விருச்சிகம்: சூரியன் உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த பணிகள் சிறக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். இந்த மாதம் முழுவதும் பணப் புழக்கம் சரளமாக இருக்கும்.

    தனுசு: சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். சிறு உல்லாசப்பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

    மகரம்: சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். செய்யும் தொழிலில் பண வரவு அதிகரிக்கும், நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பூர்வீக சொத்து விற்பனை மூலம் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகு படுத்தும் பணியை தொடங்குவீர்கள்.

    கும்பம்: சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் பயணம் செய்வதால் வீடு வாகன யோகம் உண்டாகும், புதிதாக வீடு வாங்குவீர்கள். பரம்பரை சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மனதில் உள்ள நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

    மீனம்: சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செய்யும் செயல்கள் எல்லாம் சிறப்படையும்.
    அரசாங்கத்திடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேலை தொழிலுக்காக அடிக்கடி வெளியூர் செல்வீர்கள்.

    12 zodiac signs 12 ராசிகள் 12 ராசிக்கும் பலன்கள் astrology horoescope prediction of tamil month of vaikasi rasi palan tamil rasipalan tamil astrology news vaikasi Vaikasi matha rasi palan vaikasi month rasi palan தமிழ் மாத ராசிபலன் வைகாசி தமிழ் ஜோதிடம் செய்திகள் ராசி பலன் வைகாசி வைகாசி மாத ராசி பலன் ஜோதிட செய்திகள் தமிழ் Vaikasi Month Rasi Palan ஜோதிடம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article27 மக்களை மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? வாடிகன் இல்லை!
    Next Article முடியுது வெயில்.. வரப்போகுது மழை.. வெதர்மேனின் குளு குளு நியூஸ்..
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.