வேளாண் துறை அமைச்சர் வினோத் வாசித்து வரும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது…
பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு
1000 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 80 விழுக்காடு மானியத்தில், மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு
ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைச்சக் ரூ.6 கோடி ஒதுக்கீடு.
100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகல் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு
கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80% மானியத்தில் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு
வான்மகள் திட்டத்தில் 100 மகளிர் உள்பட500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி உரிமம் அளிக்கப்பட்டு, 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
24ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளான் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க227.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
