விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர் (காங்.,) 3,85,256 வி.விஜய பிரபாகர் (தே.மு.தி.க.,) 3,80,877 ராதிகா (பா.ஜ.) 1,66,271 எஸ்.கவுசிக் (நாம் தமிழர்) 77,031 வாக்குகள் பெற்றனர். இதில் விஜய பிரபாகரன் 4309 வாக்குகளில் தோல்வியை சந்தித்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிட்டு நல்ல வரவேற்பை பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அவர் அருப்புகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை.
நேரடியாக அவர் போட்டியிடவில்லை என்றாலும் தேமுதிகவுக்கு அங்கு வாக்கு வங்கி அதிகம் இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் அங்கு கணிசமான தொகுதிகளில் தேமுதிக சார்பில் நிர்வாகிகளை நிறுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது.
எந்த கூட்டணியில் தேமுதிக பங்கேற்றாலும் விருதுநகர் மாவட்டத்தில் அதிக தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது