Close Menu
    What's Hot

    தவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    பிரிந்து சென்றவர்களை ஓரணியில் இணைக்க வேண்டும்..! அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்..!

    இந்திய மாலுமிகள் 4 பேர்  உக்ரைன் கடற்கரையில் உயிரிழப்பு: ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»ஜூலையில் வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் தொடக்கம் – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
    தேர்தல் 2026

    ஜூலையில் வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் தொடக்கம் – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025Updated:June 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Archana Patnaik 2024 11 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் ஜூலையில் தொடங்கவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் ஆலோசனை நடத்தினார்.

    தேர்தல் துறையில் மேற்கொள்ளப்படும் ஊடக மேலாண்மைப் பணிகள், சமூக ஊடகங்களின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன்பின் பிரதான ஊடகங்களின் செய்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

    இந்த நிகழ்வின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் அக்டோபரில் தொடங்கப்படும். இந்தப் பணிக்கு முன்பாக, வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் ஜூலையில் தொடங்கும்.

    தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 400-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் 1,200 வாக்காளர்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

    மாநிலத்தில் 1,200-க்கும் அதிகமாக வாக்காளர் இருக்கக் கூடிய வாக்குச் சாவடிகள் சுமார் 11 ஆயிரம் வரை இருக்கும். எனவே, அந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    மேலும், உயரமான கட்டடங்கள், நகர்ப்புரங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் வசதிக்காக அந்தப் பகுதியிலேயே வாக்குச் சாவடிகள் அமைத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும் பிழையில்லாமல் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர். தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகள், விதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படுவர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் மூதாட்டியை கடையை எடுக்கச் சொல்லிஅட்டூழியம் செய்த தி.மு.க நிர்வாகி
    Next Article அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும்-கூட்டத்தில் வலியுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    July 21, 2026

    பிரிந்து சென்றவர்களை ஓரணியில் இணைக்க வேண்டும்..! அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்..!

    July 21, 2026

    இந்திய மாலுமிகள் 4 பேர்  உக்ரைன் கடற்கரையில் உயிரிழப்பு: ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    பிரிந்து சென்றவர்களை ஓரணியில் இணைக்க வேண்டும்..! அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்..!

    இந்திய மாலுமிகள் 4 பேர்  உக்ரைன் கடற்கரையில் உயிரிழப்பு: ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    கரூர் நெரிசல்; அரசுப் பணி வழங்கிய விவகாரம்!. பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம்!.

    டெல்லி:  சிஜேபி போராட்டம்: காயமடைந்தவர்களை சந்தித்த ஜே.பி. நட்டா; ராகுல் காந்தியும் மருத்துவமனைக்கு செல்கிறார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.