இஸ்ரேல் – ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அங்கு சிக்கியுள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் அவசர காலங்களில் உதவி பெற ஏதுவாக பிரத்யேக உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஈரானில் உள்ள தமிழர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் எந்த நேரத்திலும் உதவி கோர பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 3793 (இந்தியாவிற்குள்)
சர்வதேச தொலைபேசி எண்: +91 8069009901
மின்னஞ்சல் முகவரி: nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தற்காப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
