டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

 

கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். தெலுங்கானா, பஞ்சாப் முதல்வர்களும் பங்கேற்றனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்கு வங்க முதல்வர்கள் பங்கேற்கவில்லை.

 

கூட்டம் முடிந்த பின், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

 

ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

 

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல்.

சென்னை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைத்தல்.

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 6/8 வழிச்சாலையாக மேம்படுத்துதல்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தல்.

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு (SSA) நிதி ஒதுக்கீடு.

பட்டியல் இனத்தவர் பட்டியலில் சில சமூகங்களின் பெயர்களை மாற்றுதல்.

பட்டியல் இனத்தவராக மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர் பட்டியலில் சேர்த்தல்.

மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் கைதிகளை விரைவாக விடுதலை செய்தல்.

இந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஸ்டாலின் ட்வீட்:

நிதி ஆயோக் கூட்டத்தின்போது, பிரதமரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய முன்னுரிமைகளை விவரிக்கும் குறிப்பாணையை அளித்தேன். இந்த திட்டங்களை பிரதமர் உரிய அவசரத்துடன் பரிசீலிப்பா◊ர் என்று நம்புகிறேன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version