- காலை உணவுன்னா இட்லி, தோசைன்னு ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிச்சுப் போச்சா? உங்க வீட்டுல உப்புமான்னா எல்லாரும் மூஞ்சிய சுளிக்கிறாங்களா? கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான, சத்தான ரெசிபி. கோதுமை ரவையும், பாசிப்பருப்பையும் வச்சு ஒரு தடவை உப்புமா செஞ்சு பாருங்க.
பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி செஞ்சா இன்னும் அட்டகாசமா இருக்கும்.
பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1/2 கப்
கோதுமை ரவை – 1 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு (துருவியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 4 கப்
உப்பு – சுவைக்கேற்ப
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சட்னிக்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1/2 மூடி
பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 1 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – சிறிது
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
முதல்ல ஒரு வாணலில பாசிப்பருப்பை லேசா வறுத்து, தண்ணில பத்து நிமிஷம் ஊற வச்சுடுங்க.
குக்கர்ல எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளிங்க.
அதுல துருவின இஞ்சி, நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் நல்லா வதங்கட்டும்.
அப்புறம் நறுக்கின தக்காளி சேத்து வதக்குங்க.
நறுக்கின பீன்ஸ், கேரட், மஞ்சள் தூள் போட்டு நல்லா வதக்கிடுங்க.
ஊற வச்ச பாசிப்பருப்போட கோதுமை ரவையை ரெண்டு தடவை கழுவி சேத்து கிளறுங்க.
நாலு கப் தண்ணி ஊத்தி, தேவையான உப்பு போட்டு குக்கரை மூடி ரெண்டு விசில் விடுங்க.
விசில் போனதும் குக்கரைத் திறந்து நெய் ஊத்தி நல்லா கிளறினா சுவையான பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா ரெடி!
சட்னி செய்ய மிக்சர்ல தேங்காய், பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா அரைச்சுக்கோங்க.
அரைச்ச சட்னியை ஒரு கிண்ணத்துல எடுத்து கொஞ்சமா தண்ணி கலந்துக்கோங்க.
கடைசியா தாளிக்கிறதுக்கு வாணலில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு சட்னில கொட்டுங்க.
இந்த சத்தான, ருசியான பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமாவை தேங்காய் சட்னியோட சாப்பிட்டு எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க!