தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக பொறுப்பை ஏற்றுக் கொண்ட ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் என கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் என 717 மதுக்கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடும்படி மே மாதம் 12ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்பட்டன.
இந்தக் கடைகளில் பணியாற்றி வந்த மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட விற்பனையாளர்கள் வேறு கடைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை பற்றிய தகவலை வழங்கவும், மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை கேட்டு, டாஸ்மாக் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட ஒருவருக்கு, ஒருவர் ஜூன் 5 ஆம் தேதி அனுப்பிய பதிலில், ‘கோப்பு நிலுவையில் உள்ளது; எனவே, தகவல் வழங்க இயலாது’ என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனால் முதலமைச்சர் அறிவித்தபடி 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா என எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் எங்கெங்கு எவ்வளவு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்னும் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை வடக்கில்13, சென்னை தெற்கில் 9, சென்னை மத்தியில் 9, கஞ்சிபுரம் வடக்கில் 10, காஞ்சிபுரம் தெற்கில் 8, திருவள்ளூர் கிழக்கில் 27, திருவள்ளூர் மேற்கில் 6 என 82கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்திற்குபட்ட கோவை வடக்கில் 48, கோவை தெற்கில் 23, கரூர் மாவட்ட்த்தில் 8, ஈரோடு மாவட்டத்தில்42, திருப்பூர் மாவட்டத்தில் 31, நீலகிரி மாவட்டத்தில் 27 என 179 மதுக்கடைகளும், சேலம் மண்டலத்தில் அரக்கோணம் பகுதியில் 7, தரும்பரியில் 7, கிருஷ்ணகிரியில் 7, நாமக்கல் மாவட்டத்தில் 14, சேலம் மாவட்டத்தில் 22, திருவண்ணாமலை மாவட்டத்தில் 19, வேலூர் மாவட்டத்தில் 6 என மொத்தம்82 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதேபோல் திருச்சி மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் 21, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 4, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17, பெரம்பலூர் பகுதியி , தஞ்சாவூர் மாவட்டத்தில் 6, திருச்சி மாவட்டத்தில் 15, திருவாரூர் பகுதியில் 6, விழுப்புரம் மாவட்டத்தில் 9 என கடைகள் மூடப்பட்டுள்ளன.
மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 26 மதுக்கடைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15, ராமநாதபுரம் மாவட்டத்தில் 29, தேனி மாவட்டத்தில்12,திருநெல்வேலி மாவட்டத்தில் 33, தூத்துக்குடி மாவட்டத்தில் 63, மதுரை தெற்கில் 39, மதுரை வடக்கில் 13, விருதுநகர் மாவட்டத்தில் 42, சிவகங்கை மாவட்டத்தில் 18 என 290 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை மண்டலத்தில் 82, கோவை மண்டலத்தில் 179, சேலம் மண்டலத்தில் 82, திருச்சி மண்டலத்தில் 84, மதுரை மண்டலத்தில் 290 என 717 கடைகல் அடைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
