கர்நாடக மாநிலம், மாதேஸ்வர மலைப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில், காட்டு யானை ஒன்று உணவைத் தேடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய வார இறுதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைப்பகுதிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, அங்கு அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளது. ஆனால், இந்த மலைப்பகுதி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பிலிகிரிரங்கன சுவாமி கோயில் புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி வருகின்றன. 

https://x.com/harishupadhya/status/2066757604513337428

அந்தவகையில் இந்த குப்பைகளை கொட்டியுள்ள இடத்தில் காட்டு யானை ஒன்று உணவுகளை தேடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இவ்வாறு குப்பைகளுக்கு மத்தியில் உணவு தேடும் போது, விலங்குகள் தற்செயலாக பிளாஸ்டிக் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உட்கொள்ளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை உருவாக்கியுள்ளதுடன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த பகுதியில் கடுமையான குப்பை மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியுள்ளனர். பல்லுயிர் வளம் மிகுந்த இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இவ்வளவு பெரிய அளவில் குப்பைகள் குவிக்கப்படுவது எப்படி அனுமதிக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த குப்பைகள் குவிந்ததற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version