பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் ஸ்டாக் தீர்ந்துவிடும் நிலை ஏற்படும். அனைத்தையும் மத்திய அரசு பேலன்ஸ் செய்து வருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வு அனைத்து இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்குத் தெரியும். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விலை உயர்வைத் தாங்கிக் கொண்டு, மக்கள் தங்களது செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்.

150 ரூபாய் வரை விலை ஏறும் என்று மக்களைப் பயமுறுத்தாதீர்கள். அதைக் கட்டுப்படுத்தவே முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஒருவேளை இந்த விலை உயர்வை ஏற்றாமல் இருந்தால், அடுத்த ஒரே வாரத்தில் ஸ்டாக் இல்லாமல் போய், கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை வந்துவிடும். இந்த அரசு அனைத்தையும் பேலன்ஸ் செய்து வருகிறது. சர்வதேச யுத்தம் எப்போது முடியும் என்று சொல்ல முடியாது, அதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். ரஷ்யாவிடம் இருந்து வரும் கச்சா எண்ணெய் குறித்த கேள்விகளுக்கு, அது ஒரு ராஜதந்திர விவகாரம் என்பதால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.”

முதலமைச்சர் விஜய் முதலில் வேலை செய்யட்டும், அதைச் செய்து நிரூபிக்கட்டும். அதற்குள் அவரை விமர்சிப்பது சரியாக இருக்காது. மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், நன்றாகப் பணி செய்யட்டும். தமிழக வெற்றி கழகத்தை கேரளாவில் தொடங்கினால் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் பாஜக இயற்கையாக வளர்வதற்குச் சற்றே நாட்களாகும், அதற்கு நேரம் கொடுங்கள். கேரளாவில் முன்பு 1 சீட்டில் இருந்து பூஜ்யத்திற்குச் சென்றோம். இப்போது 3 சீட்கள் வந்துள்ளது, இது 30 ஆக மாறும். நாங்கள் படிப்படியாக வளர்ந்து வருகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். நடிகர் ரஜினிகாந்த் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தோண்டிப் பார்க்க முடியாது. அவர் எந்த அரசியலுக்கு வேண்டுமானாலும் வரட்டும், தமிழ் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்ந்து விவாதத்தில் இருக்கிறது. யாராவது ராஜினாமா செய்தோ அல்லது இறந்து போயோ இடைத்தேர்தல் வந்தால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் 5, 6 மாதங்கள் வீணாகிக் கொண்டே இருக்கும். 12 ஆண்டுக்கால பிரதமர் மோடியின் ஆட்சியில் வந்தே பாரத், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டம் எனப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. மீண்டும் லாக்டவுன் வருமா என்ற கேள்விக்கு, என்னை மீம் மெட்டீரியல் ஆக்க வேண்டாம்” என்று சிரித்தபடி பதிலளித்துவிட்டு சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version