ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு தேர்வு செய்த இங்கிலாந்து அணியில்,  சோபி எக்ல்ஸ்டோன் தலைமையிலான பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, அயர்லாந்தை 118/9 என்ற கணக்கில் கட்டுப்படுத்தினர்.

தொடக்க வீராங்கனைகள் ஏமி ஹண்டர் மற்றும் அலானா டால்செல் முதல் 5 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் கேபி லூயிஸும் விரைவில் வெளியேற, அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அயர்லாந்து அணியில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும், லூயிஸ் லிட்டில் இறுதி ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்தும் அணியை 118/9 என்ற போராடக்கூடிய இலக்கிற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் 119 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. பவர்பிளே ஓவர்களிலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஐமி மக்வையர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பிரெண்டர்காஸ்ட் தனது யார்க்கர் பந்தில் ஆலிஸ் கேப்சியை வெளியேற்றினார்.

ஆனால் அனுபவமிக்க நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹீதர் நைட் இணைந்து 64 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர். ஹீதர் நைட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதத்தை நெருங்கிய நிலையில் 48 ரன்களில் இருந்த ஸ்கிவர்-பிரண்ட் ஓய்வுபெற்ற வீராங்கனையாக (Retired Out) வெளியேறினார்.

இறுதிக்கட்டத்தில் சில விக்கெட்டுகள் விழுந்தபோதிலும், சார்லி டீன் மற்றும் கிப்சன் ஆகியோர் அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 119/6 எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version