வேலூர் மாவட்டம் விருதம்பட்டு அடுத்த காளியம்மன் தோப்பு பகுதியில் அண்ணா நகர் தெருவில் நிற்கவைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்து இரு சக்கர வாகனத்தை அதிகாலை 3 மணி அளவில் இரண்டு இளைஞர்கள் முகத்தை கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு வாகனத்தின் பூட்டை உடைத்து திருட முன்றனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த சாவியை போட்டு வாகனத்தை திறக்க முயன்றனர் அப்போது திறக்க முடியவில்லை என்பதால் அருகில் இருந்த மற்றொரு இளைஞர் செல்போன் டார்ச் லைட்டை இயக்கினா்அதன் வெளிச்சத்தில் திறக்க மீண்டும் முயன்றனர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் யாரோ ஒருவர் சத்தம் கேட்டு அங்கு வர அங்கிருந்து இரண்டு பேரும் மெதுவாக நடந்து சென்றனர். அங்கு வந்த பொதுமக்களில் ஒருவர் அவர்களை நிற்கும்படி கூறியும் நிற்காமல் வேகமாக நடந்து சென்றனர்.

அப்போது இந்த இருவர்களின் தொடர்புடைய மூன்றாவது நபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு கொண்டு மூவரும் வேகமாக  தப்பிச் சென்றனர். இப்பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து விருதம்பட்டு போலீசார் வாகன திருடர்களை தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version