புதிய ஜிஎஸ்டி வரி முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பைக், ஏசி உள்ளிட்டவைகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் அமலில் இருந்த சரக்கு சேவை வரிகளில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என 4 அடுக்கு முறையாக இருந்த ஜிஎஸ்டி வரியில் கடந்த 3ஆம் தேதி மாற்றங்கால் செய்யப்பட்டது. அதில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஆடம்பர பொருட்களுக்கு 40% வரை வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி ரெடிமேட் பரோட்டா, சப்பாதிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. இதேபோல் நூடுல்ஸ், ரெடிமேட் பாஸ்தா, சாக்ல்ட் வரி 5% ஆக இருப்பதால் அவற்றின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. நெய், வெண்ணெய் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோவுக்கு ரூ.40 வரை விலை குறையலாம்.

இதேபோல் ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின் மற்றும் 32 இன்ச்க்கு மேல் உள்ள டிவிக்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பானை, தட்டு, கரண்டி, குக்கர், சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட் மீதான வரியும் 28% இருந்து 18% ஆக குறைய வாய்ப்புள்ளது. <span;>ஆடம்பர கார்களை தவிர 1,200 ‘சிசி’க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால் அவற்றின் விலையும், 350 சிசி பைக்குகளின் விலை ரூ.10000 இருந்து ரூ.30,000 வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் இதர மருத்துவ உபகரணங்கள், தெர்மா மீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை ஆகியவற்றின் கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள், பென்சில், ரப்பர் விலையும் குறைய உள்ளது. சிமெண்ட் விலைக்கு மூட்டைக்கு ரூ.40 வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version