ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இரு அவைகளிலும் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல்,அமெரிக்கா போர் குறித்து  விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள தூதரகங்கள் மூலமாக தொடர்ச்சியாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, கிட்டத்தட்ட 67,000 இந்தியர்கள் சர்வதேச எல்லைகளைத் கடந்து நாடு திரும்பியுள்ளனர்.

இந்தப் போரில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போய் உள்ளார். வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியர்கள் உள்ளனர். ஈரானில் மாணவர்கள் உள்பட 4000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. எங்களை பொறுத்தவரை பொதுமக்களின் நன்மை தான் முதன்மையான விஷயம். அதற்காக பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version