கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக புதிதாக 360 டிகிரி கோண முப்பரிமாண ரியாலிட்டி டோம் திரையரங்கம் தொடக்கம். புதிய அனுபவத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செய்கின்றனர்.
மூணாறில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது.இங்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக புதிதாக 360 டிகிரி கோண முப்பரிமான
ரியாலிட்டி டோம் திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரையரங்கத்தில் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாண காட்சிகளை கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஆனால் ஐந்து நிமிட கட்சிக்கு 250 ரூபாய் கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,காட்சி நேரம் குறைவாகவும் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும்,கட்டணத்தை குறைப்பதற்கு சுற்றுலாத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மேலும் குழந்தைகளுக்கு கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
