குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அம்மாநில முதலமைச்சம் பூபேந்திர படேலுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் நோக்கி இன்று மதியம் 1.38 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே குடியிருப்புகளில் விழுந்து விபத்துக்குள்ளானது. பெரும் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. இதில் பயணித்த 242 பணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்தா? தீவிரவாதிகளின் சதிவேலையா? என்பன உள்ளிட்ட கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணியும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது நிலைமை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
