Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் கோர விபத்து.. 242 பேர் பலி
    இந்தியா

    குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் கோர விபத்து.. 242 பேர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksJune 12, 2025Updated:June 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1735115387 Flight Crash L
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.17 மணிக்கு புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தின் குடியிருப்பு பகுதிகளில் விமானம் தாழப்பறந்து கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது.

    அகமதாபாத் லண்டன் காட்விக் வழித்தடத்தில் ஏர் இந்தியாவின் AI 171 விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர்இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என்றும் தெரிகிறது.

    விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் காந்திநகரில் இருந்து விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன. மொத்தம் மூன்று குழுக்கள் வதோதராவில் இருந்து அகமதாபாத்திற்கு அனுப்பி வைக்கப்பப்பட்டுள்ளன.

    விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை என்ன என்பது தான் இப்போது மாபெரும் கவலையாக உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏர் இந்தியா விமான விபத்து – இதுவரை தகவல்கள்
    Next Article விமான விபத்து – குஜராத் முதலமைச்சருடன் அமித் ஷா அவசர ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.