பாகிஸ்தானின் 13 தீவிரவாத நிலைகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.

சென்னை ஐஐடியின் 62 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய அறிவுசார் மையத்தை தொடங்கி வைத்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேடையில் பேசியது,

சிந்தூர் தாக்குதலில் நம்முடைய தனித்துவமான தொழில்நுட்பங்கள் சிறப்பாக பணியாற்றியதை நாம் பெருமையாக கொள்ள வேண்டும். பிரமோஸ், ஒருங்கிணைந்த விண்வெளி வான் பாதுகாப்பு அமைப்பு, ரேடார் என மொத்த அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு, நாம் ஒன்பது தீவிரவாத இலக்குகளை சரியாக தாக்கினோம். இதில் எந்த இலக்கும் எல்லையில் இல்லை. தொலைதூரத்தில் இருந்த இலக்கையும் நாம் எதையும் தவறவிடவில்லை.

நாம் மிகச் சரியாக துல்லியமாக தாக்குதல் நடத்தினோம். ஐந்து நிமிடத்தில் தொடங்கி 23 நிமிடங்களில் மொத்த ஆபரேஷனும் முடிந்து விட்டது. நமது பிரம்மோஸ் ஏவுகணை மிக துல்லியமாக தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தானி 13 தலங்களை துல்லியமாக நாம் மேப்பிங் செய்தோம். ஆனால் சில சர்வதேச ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டது.ஆனால் நம்முடைய தாக்குதலை ஆதாரபூர்வமாக அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்களுக்கு வெளியிட்டோம்.

ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் நம் நாட்டை முன்னேற்ற உங்களுடைய நேரத்தை ஒதுக்கினால் நீங்களும் சாதிக்கலாம். மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது அதுதான் நீங்கள் சிறப்பாக செய்யுங்கள் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version