கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது ‘GOAT இந்தியா டூர் 2025’ பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ (Vantara) வனவிலங்கு மையத்திற்கு சென்றார். இந்த நிகழ்வில் பல ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கிய தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Richard Mille RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ என்ற வாட்ச்சின் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடி என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வகையை சேர்ந்த வாட்ச் உலகிலேயே 12 வாட்ச்சுகள் மட்டுமே உள்ளன.
இதுமட்டுமல்லாமல், ஆனால் மெஸ்ஸியின் வந்தாரா பயணம், வெறும் ஆடம்பரத்துக்கான சந்திப்பாக மட்டுமல்ல. சனாதன தர்ம மரபுகளை பின்பற்றி, அவர் அங்கு பாரம்பரிய இந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அம்மன் பூஜை, கணேச பூஜை, ஹனுமான் பூஜை, சிவ அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளில் பங்கேற்று, மகா ஆராதனை செய்து ஆசீர்வாதம் பெற்றார்.
அதன்பின், மெஸ்ஸி வந்தாராவின் பரந்த வனவிலங்கு பாதுகாப்பு வளாகத்தை சுற்றிப் பார்த்தார். மீட்கப்பட்ட சிங்கங்கள், புலிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளுடன் நேரம் செலவிட்டார்.
