நாடாளுமன்றத்தில் SIR விவாதத்தின்போது அமித்ஷா பதற்றமாக இருந்ததாகவும், அவரது கைகள் நடுங்கியதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் நேற்று நடைபெற்ற SIR குறித்த விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே வார்த்தை போர் வெடித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நேற்றைய விவாதத்தில் அமித் ஷா தனது கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை, எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறினார். மாறாக அமித்ஷா பதற்றமாகவும், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக கூறினார்.
நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் நடத்தை அசாதாரணமானது என்று கூறிய ராகுல் காந்தி, அவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அவரது கைகள் நடுங்கின. முழு நாடாளுமன்றமும் இதைக் கண்டது. பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வருமாறு அமித் ஷாவை சபையில் வெளிப்படையாக சவால் செய்ததாகவும் , ஆனால் அதற்கும் அமித்ஷா பதிலளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வரலாற்றில் எந்தப் பிரதமரும் இதைச் செய்ததில்லை என்ற ராகுல் காந்தி, வாக்கெடுப்பு அர்த்தமில்லாமல் போய்விட்டால், மக்களவை, விதான் சபா அல்லது பஞ்சாயத்து ஆகியவை இல்லாமல் போய்விடும் என்று கூறினார்.
