Close Menu
    What's Hot

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு
    இந்தியா

    பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025Updated:November 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bhr election
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகளும் பதிவாகிய நிலையில், பீகார் மாநிலத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் பிற்பகல் 3 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 53.77% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக செரியா-பரியார்பூர் சட்டமன்ற தொகுதியில் 62.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராஹோபூர் சட்டமன்ற தொகுதியில் 55.20% வாக்குகளும் , பீகாரில் 2 துணை முதலமைச்சர்கள் போட்டியிடும் தாராப்பூர் சட்டமன்ற தொகுதியில் 55.33% வாக்குகளும் , லக்கிசாராய் சட்டமன்ற தொகுதியில் 55.47% வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிகார் மாநிலத்தில் குறைந்தபட்சமாக திகா சட்டமன்ற தொகுதியில் 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது இந்திய தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    முதல் கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக-அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி – சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி – கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

    கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.

    bihar#election#update
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாசோலை மோசடி வழக்கில் கஸ்தூரி ராஜா விடுதலை…சென்னை உயர்நீதிமன்றம் உறுதி
    Next Article மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிப்பு; கேள்விக்குறியான ஷமியின் எதிர்காலம்!
    Editor TN Talks

    Related Posts

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    February 26, 2026

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    Trending Posts

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    February 26, 2026

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    February 26, 2026

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    February 25, 2026

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.