Close Menu
    What's Hot

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
    அரசியல்

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 25, 2026Updated:February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NK AND SPK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    இரா. நல்லக்கண்ணு தனது101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

    தனது15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

    சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார்.

    முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தோழருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி அவரது பெருமைக்கு மேலும் புகழ் சேர்த்தார். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Nallakannu Tribute R. Nallakannu Social Justice Movement சமூகநீதி போராட்டம் நல்லகண்ணு நினைவு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!
    Next Article உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 
    Editor TN Talks

    Related Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    April 14, 2026

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    Trending Posts

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    April 14, 2026

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    April 14, 2026

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    69 வயதில் ‘கெத்து’ காட்டும் கொரில்லா!. கின்னஸ் சாதனை!. பேத்தியுடன் விளையாடி மகிழும் ஆச்சரியம்!

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.