மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் முதல் மாநாடு நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி, டிசம்பரில் டெல்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாடுகள் நடைபெற்றன. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் 4-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 5-வது தலைமைச் செயலாளர்கள் தேசிய மாநாடு வரும் 26-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.
வரும் 28-ம் தேதி வரை 3 நாட்கள் மாநாடு நடைபெறும். இதில் தலைமைச் செயலாளர்கள் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர்.
