இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் விசா விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் ‘ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறையானது இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம் என்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் விசா விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் ‘ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை’ நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Shenzhen நகரைத் தலைமையிடமாகக் கொண்ட சீன ஆன்லைன் தளம் Greater Bay Area (GBA) தெரிவித்ததாவது, இதற்கு முந்தைய முறையில் விண்ணப்பதாரர்கள் பல காகித ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. புதிய ஆன்லைன் நடைமுறை அதைவிட எளிமையானதாக உள்ளது.

சீனத் தொழில் வல்லுநர்களுக்கான வணிக விசா: Greater Bay Area (GBA) வெளியிட்ட அறிக்கையின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சுற்றுலா (L), வணிக (M), மாணவர் (X), மற்றும் வேலை (Z) விசாக்களுக்கு மின்னணு முறையில் விண்ணப்பப் படிவங்களை நிரப்பவும், தேவையான ஆவணங்களை பதிவேற்றவும், மேலும் பயோமெட்ரிக் செயல்முறையையும் மேற்கொள்ளவும் முடியும்.

இதற்கு முன்னர் இந்த மாதத்தின் தொடக்கத்தில், சீன தொழில்முனைவோர்களுக்கான வணிக விசாக்களை விரைவாக வழங்க இந்தியா சில நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், சீன விசாவிற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு (screening) செயல்முறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தியப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதி: சீனத் தூதரகத்தின் இந்த நடவடிக்கை இந்தியப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கிறது. விசா விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது மிகவும் வெளிப்படையானதாகவும், வேகமானதாகவும், வசதியானதாகவும் மாறியுள்ளது. இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தையும் வர்த்தகத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version