டெல்லியில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் கண்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, போராட்டம் காரணமாக ஈரான் எல்லை மூடப்பட்டது. இதனால் விமானம் பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து நியூயார்க் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கு திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகள் வெளியேறினர். தொடர்ந்து விமானம் ஓடு பாதையில் நிறுத்த முயற்சிக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தில் இருந்த கண்டெய்னர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் எஞ்சின் சேதமடைந்து. இதனால் தொடர்ந்து அந்த விமானத்தின் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான விபத்துக்கான காரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
